யோகா

ஏறத்தாழ 14 ஆண்டுகளாக நாங்கள் செய்து வரும் உன்னத பணியால்
பயன் பெற்றோர் சுமார் 2000 கும்பங்கள்
பயபெற்றுகொண்டிருப்போர் ஏராளம்
நோயில்லா மருந்தற்ற உன்னத வாழ்வை யோக முறையில் பெற வாருங்கள் பயன்பெறுங்கள்

free web counter
அறிவை அறிவால் அறிந்து கற்பதே சிறந்தது

யோகா கற்பவர்களின் கவனத்திற்கு...

குருவின் அறிவுரைகள் (குருவின் வார்த்தைகளில்) 


யோகா கற்பவர்களின் கவனத்திற்கு...
  
குரு யோகா கற்றுத் தரும் போது அவர் கூறும் வார்த்தைகளை உற்று கவனிக்க வேண்டும். ஒவ்வொரு பயிற்சியின் போதும் சுவாசம் உள்ளே, வெளியே சென்று வரும் பாதையை நன்கு கவனிக்க வேண்டும். நம் சுவாசத்தின் மீது கவனம் இல்லையென்றால் எந்த ஒரு நிலையிலும் உள்ளுணர்வை நாம் அறிய முடியாது. ஆகவே சுவாசத்தின் மீது முழுக்கவனமும் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்.

      நம் அருகில் யோகா செய்பவர்களை பார்க்கவோ, அவர்களிடம் பேசவோ கூடாது. பயிற்சி நேரம் அனைவருக்கும் முடிந்த பின்புதான் மற்றவர்களிடம் கலந்துரையாடல் செய்ய வேண்டும். இல்லையெனில் நாட்கள் செல்ல செல்ல மற்றவாகள் கூறும் எந்தவொரு உள்ளுணர்வையும் நாம் அறிய முடியாமல் போகும். மேலும் நமக்கு இந்த நிலை தெரியவில்லையே என்ற ஏக்கமும், நமக்கு ஏன் தெரிவதில்லை என்ற மன அழுத்தமும் ஏற்பட்டு நாளடைவில் குரு நமக்கு சரியாக கற்றுத்தரவில்லையே என்ற எண்ணம் மனதில் தோன்றும். இவ்வாறு தோன்றினால் பயிற்சியைத் தொடர்ந்து செய்ய முடியாமல் போகும். இதனால் நாம் பாவம் செய்யும் நிலைக்குத் தள்ளப்படுவோம். எப்படியென்றால் நாம் குரு சொல்லியதை முழுமையாக கேட்காமல், அவரின் எண்ணப்படி நடந்து கொள்ளாமல் இவ்வளவு காலம் இதைச்செய்ய வேண்டும் என்று கூறியும் நாம் செய்யாமல், தாம் செய்தது சரி என்று கூறி வாதாடும் நிலையில் நம் மனம் தள்ளப்படும் அப்பொழுது ஒரு நிமிடம் அமைதியாக இருந்து நம் மனதில் நடந்ததை நினைத்துப் பார்த்து பக்குவமான நிலைக்கு வரவேண்டும்.

      ஆனால் குரு மீண்டும் இதை முறையாக செய்தால் உள்ளுணர்வை காணலாம் என்பார். குரு கோபப்படமாட்டார். அவர் அந்த நிலையில் உண்மையான உட்பொருளை பொறுமையாக எடுத்துக்கூறுவார். நாம் அமைதியாக மறுத்துப்பேசாமல் கேட்க வேண்டும். மீண்டும் குருவின் ஒழுக்க நெறி கட்டளையின்படி தொடர்ந்து வந்தால் பலன் நிச்சயம் உண்டு.

      யோக முறையில் பல்வேறு நிலைகள் உண்டு. ஒவ்வொரு நிலைக்கும் குறிப்பிட்ட பயிற்சி காலம் உள்ளது. அந்த பயிற்சி காலத்தில் முறையாக கற்று, அந்த பயிற்சியின் உட்பொருள் நிலையின் கருத்தை உள்ளுணர்ந்து செயல்படவேண்டும். யோகா கற்பவர்கள் எடுத்தவுடன் பிராணயாமம் அதாவது மூச்சுப்பயிற்சியோ மற்றும் தியானத்தின் பல பரிமாணங்கள் கற்பது முத்திரைகளைப் பழகுவது முறையான பயிற்சியாகாது. அதற்கும் நாம் சில காலமுறை அட்டவணை வகுத்துள்ளோம். அந்த காலமுறை அட்டவணையை பின்பற்றி செய்தால்தான் இறைநிலையை அடைய எளிய வழியாக இருக்கும்.

      சித்தர்கள் கூறிய இந்த காலமுறை அட்டவணையை மாற்றி நாம் செய்து வந்தால் முறையான பலன் கிடைக்காது. இது இந்த 14 வருட அனுபவத்தில் என்னுள் இருக்கும் குருவின் மூலம் நான் தெரிந்து கொண்டேன். நான் பெற்ற இந்த பேரின்பத்தை முறையாக மற்றவரும் பெறவேண்டுமென்பதே என் நீண்ட கால விருப்பமாக இருந்தது.

      அதை இறைவன் திருவருளால் தவறாமல் நான் உங்களுக்கு கற்றுக்கொடுத்து எல்லையில்லா பேரின்பத்துடன் நீங்களும் மற்றும் பல குடும்பங்களும் நலமுடன் வாழ்ந்து வருவதை நாம் அனைவரும் காண்கிறோம்.

      இன்னும் பல மக்களுக்கு சென்றடைய வேண்டும். நாமும் பயன்பெற வேண்டும். மற்றவர்களும் பயன்பெற வேண்டுமென்பதே உங்கள் விருப்பமாக மனதில் உருவாக வேண்டும்.

      என்னைப் பெறுத்தவரையில் என் உடம்பின் ஒவ்வொரு அசைவும் மனதின் எண்ணங்களும் செயல்களும் என்னுள் இருக்கும் குருவாகிய சிவனே. அவன் உள்ளிருந்து என்னை வழிநடத்துகிறான். இருந்த போதிலும் என்னால் இது எதுவும் சாத்தியமில்லை. எல்லா புகழும், எல்லா செயல்களும் எல்லா எண்ணங்களும் இறைவனே! அவனே சிவன்!!

ஓம் சிவாய நம...

0 Response to "யோகா கற்பவர்களின் கவனத்திற்கு..."

Post a Comment