யோகா

ஏறத்தாழ 14 ஆண்டுகளாக நாங்கள் செய்து வரும் உன்னத பணியால்
பயன் பெற்றோர் சுமார் 2000 கும்பங்கள்
பயபெற்றுகொண்டிருப்போர் ஏராளம்
நோயில்லா மருந்தற்ற உன்னத வாழ்வை யோக முறையில் பெற வாருங்கள் பயன்பெறுங்கள்

free web counter
அறிவை அறிவால் அறிந்து கற்பதே சிறந்தது

யோகாவின் அவசியமும் பயன்களும்

தன்னுள் இருக்கும் இறைவனை நாம் அனைவரும் அறிய வேண்டும். ஆனால் இன்றைய கணிப்பொறி உலகத்தில் அறிவது மிகவும் கடினம். இருந்தாலும் இதை அறிந்து கொண்டால் எல்லையில்லா பேரின்பத்தை நம்மால் அடைய முடியும்.

      இந்த பேரின்பத்தை அடைய ஒரே வழி சித்தர்கள் காட்டிய யோக முறை தான். இந்த யோக முறையில் பல நிலைகள் இருக்கிறது. எல்லா நிலைகளையும் கற்றுக் கொள்ள வேண்டுமானால் படிப்படியாகத்தான் கற்றுக்கொள்ள வேண்டும்.

      இந்த யோக முறையை கற்றுக் கொண்டால் நாம் அடையும் பலன்கள் ஏராளம். இன்றைய உலகத்தில் நோய்களின் எண்ணிக்கையோ கணக்கில் அடங்காதவை. இந்த நோய்களிலிருந்து நம் உடலையும் உயிரையும் காப்பாற்ற வேண்டும்.

      ஒரு மனிதன் ஆரம்பத்தில் உடம்பில் எந்தவிதமான நோய்களும் இல்லாமல் இருந்தால் தான் ஆரோக்கியமாக இருப்பதாக எடுத்துக்கொள்ளக் கூடாது. காரணம் நம் உடம்பில் உள்ள கழிவுகள் முழுமையாக தினந்தோறும் வெளியே செல்வதில்லை. ஆகையால் சில வருடங்கள் கழித்து நம் உடம்பில் நோய்கள் ஏற்படக்காரணமாகின்றோம்.

      நோய்கள் வந்தாலும் சரி, நோய்கள் உடம்பில் இல்லையென்றாலும் சரி நாம் அனைவரும் யோக முறையைக் கற்றுக்கொள்ள வேண்டும்.
     
      அப்படியென்றால் நாம் ஏன் யோக முறையை கற்றுக்கொள்ள வேண்டும்? என்ற கேள்வி எழும் இதை விவரமாக கூறுகிறேன்! கேளுங்கள்.

ஒரு மனிதனுக்கு நோய்கள் இல்லையென்றால் அவனுக்கு 21 வயது ஆகும்போது யோகா கற்றுக்கொண்டால் அடுத்து வரும் வருடங்களில் நோய்கள் அவனை நெருங்காது.

மனதில் ஒருவிதமான அமைதி ஏற்படும். குடும்பத்தில் எந்த பிரச்சனை ஏற்பட்டாலும் மனதில் ஒரு நிலையான அமைதி ஏற்படும்.
     
நல்ல சுறுசுறுப்பு, தொழிலில் அதிக கவனம், சிறந்த அன்பு கொண்டவர்களாக நடந்து கொள்ளும் நிலை யோகா கற்பதினால் ஏற்படும்.

      இப்படி பல விஷயங்கள் சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால் குறிப்பாக சில விஷயங்கள்.

      * நோய்கள் நம்மை அணுகாது.
      * நம் வாழ்நாள் கூடும்
      * வயது கூடினாலும் இளமைத் தோற்றமாக தெரிவோம்.
      * இயற்கைக்கும், நமக்கும் உள்ளத் தொடர்பைத் தெரிந்துகொள்வோம்.
      * தன்னுள் இருக்கும் இறைவனை அறிய முடியும்.

      நோய்கள் இல்லாதவர்கள் தான் யோகா செய்யமுடியும் என்பதில்லை. நோய்கள் உள்ளவர்களும் அதற்கான யோகமுறைகளை கற்றுக்கொண்டால் உடம்பில் உள்ள நோய்கள் முதலில் நீக்கப்படும். அதன்பிறகு மற்ற யோக நிலைகளை நாம் கற்றுக்கொண்டால் நாமும் எல்லாவற்றையும் அறிய முடியும்.

யோகாவில் உணவு முறை :

       உலகில் உள்ள பெரும்பான்மையான மனிதர்களுக்கு யோகா  என்றொரு லை உள்ளது தெரியும். யோகாவினால் உடலும் ஆரோக்கியமும், மன அமைதியும் பெறலாம் என்பதும் தெரியும். விபரம் தெரிந்தவ ர்களில் பெரும்பான்மையானோர் யோகா கற்றுக்கொள்ள விரும்பாதது யோகாவில் உள்ள உணவு மற்றும் பழக்க வழக்க கட்டுப்பாடுகள் தான் என்பதில் வேறு கருத்தில்லை.

      உணவுமுறை என்று வரும்பொழுது மனிதனைப் போல் ஒரு முறைதவறிய உணவு பழக்கமுள்ள பிறப்பு உலகில் வேறில்லை. உதாரணமாகச் சொன்னால் உலகில் தாவரப்பச்சினி, மாமிசப்பச்சினி என்று உள்ளன. இந்த வகைப்பாட்டை அந்தந்த விலங்கினங்கள் மீறியதில்லை. புல் திண்பவை புல் திண்றும்  புலால் திண்பவை புலால் தின்றும் ஒரு மாறா நெறியினை உணவு பழக்க வழக்கத்தில் கடைபிடிக்கின்றன. ஆனால் ஆறாவது அறிவின் சபலத்தினாலோ (சாபத்தினாலோ) என்னவோ தன் உடல் எந்த உணவை செறிக்க தகுதியானது என்று பெரும்பான்மையினருக்கு தெரிவதில்லை. மனிதன் ஓர் தாவாரப்பச்சினி தான் என்பதில் இருவேறு கருத்தில்லை. மனிதன் தன் முதல் உணவாக பழங்களைத்தான் உண்டான் என்ற கூற்றும் உண்டு.

      ஆக விளக்க வேண்டியதும் இவ்வளவுதான். எல்லோரும் உணர வேண்டியதும் இவ்வளவுதான்.

      "கடவுள் படைத்த இந்த உடலையும், ஆன்மாவையும் பயன்படுத்திக்கொள்ளவே நமக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனை பாழ்படுத்தும் உரிமை நமக்கு வழங்கப்படவில்லை".

      கடவுள் தந்த இந்த ஆன்மாவையும் உடலையும் நான் எப்படி பாதுகாப்பது...? இந்த கேள்விக்கான பதிலாக கடவுள் நமக்கு அருளியதுதான் "யோகா".
     
      நோய்நொடியில்லாமல் உடலை காப்பதற்கான அத்தனை அத்தியாவசியமானவைகளை யும் யோகாவினால் மனிதன் தன் உடலில் உற்பத்தி செய்துகொள்ள முடியும்.

      யோகாவினால் கடவுளை உணரலா(ம்)மா? என்றால் தன்னை ஓர் முழு மனிதனாய் தாமே உணரலாம்.

      சைவ உணவும் முறையான வாசி (மூச்சி) பயிற்சியும் சேர்கையில் மன நெருக்கடியற்ற, உடலும் மனமும் செழித்த வாழ்க்கை வாழலாம்.
     
      கண்டதை உண்று காலம் நூறு சிலரால் கடக்க முடியும். ஆனால் உபாதையினை உடலில் சேர்க்காமல் கடக்க முடியுமா?

குருவின் அவசியம்

"குருவே சிவமெனக் கூறினன் நந்தி குருவே
 சிவம் என்பது குறித்து ஓரார் குருவே
 சிவனுமாய்க் கோனுமாய் நிற்கும் குருவே
 உரை உணர்வு அற்றதோர் கோவே"

      ஒரு வருடம் தவமிருப்பார் திருமூலர். ஒரு பாடலைப் பாடுவார். மீண்டும் தவத்தில் முழ்குவார். ஒரு வருடம் முடிந்ததும் தவத்தால் தாம் பெற்ற அனுபவத்தை ஒரு பாடலாகப் பாடுவார். அப்படி மூவாயிரம் ஆண்டுகள் தவமியற்றி மூவாயிரம் திருமந்திரப் பாடல்களை அருளிச்செய்தார்கள் திருமூலநாயனார்.

      கடவுள் மனித உருவத்தில் தம்மைத் தெரிவித்துக் கொள்ளும் பெரிய அவதாரங்களே குருமார்கள். அவர்களைக் கடவுளாகவே நினைத்துப் போற்ற வேண்டும். குருமார்கள் எல்லாம் கடவுளின் பிரதிநிதிகள் என்றே கொள்ள வேண்டும். சிவபெருமானின் ஆணையை ஏற்று இவ்வுலகத்திற்கு நலம் செய்வதற்காகவே பிறப்பெடுக்கும் புண்ணிய மூர்த்திகளே குருமார்கள். பழகிய யானையைக் கொண்டு புதிய யானையைப் பிடிப்பது போல, நம்மைப் போலவே மானிட வடிவம் தாங்கிக் கடவுளே நம்மை உய்விக்க்க் குருவடிவில் வருவதாக்க் கொள்ள வேண்டும்.

      திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி சுவாமிகள், மாணிக்கவாசகப் பெருமான் போன்றவர்களில்லை என்றால் உலகில் அன்புநெறி காணப்படுமா?

      கட்டையில் நெருப்புள்ளது. அந்த நெருப்பினை (ஒளியை) வெளியே கொண்டுவர வேறு ஒரு கட்டை வேண்டும். வேறு ஒரு கட்டையுடன் உரசும் பொழுது, கட்டையினுள்ளிருக்கும் நெருப்பு (ஒளி) வெளியே வருகிறது. அதைப்போல நம் உள்ளேயிருக்கும் ஆன்ம ஒளியை, வேறு மனித வடிவம் தாங்கி வரும் குருவால்தான் வெளியே கொண்டுவர முடியும். பசுவிடம் பால் பெறுவதற்கு கன்றுக்குட்டி அவசியமாதல் போல சிவ பெருமானது திருவருளைப் பெறுவதற்குக் குருவருள் அவசியமாகும்.

      சூரிய காந்தக் கல்லின் மீது சூரிய ஒளி பட்டவுடன் நெருப்பு எழுவது போல குருவின் அருட்பார்வை நம்மீது பட்டவுடன் மெய்ஞானம் தோன்றும். குருவினால் இப்பிறவியில் பெறும் ஞானம் (அறிவு) எடுக்கின்ற பிறவிகள் தோறும் தொடர்ந்து வருவதாகும்.

      "குருட்டினை நீக்கும் குருவினைக் கொள்ளார்
      குருட்டினை நீக்காக் குருவினைக் கொள்வர்
      குருடுங் குருடுங் குருட்டாட்டம் ஆடிக்
      குருடுங் குருடும் குழி விழுமாறே"

(குருட்டினை நீக்குதல்-அறியாமை நீக்குதல், குருடு-அறிவிலி, குழிவிழுதல்-துன்பத்திற்குள்ளாதல்)

நம்மில் குரு அருள் நிரம்புவதை எப்படி கண்டறிந்து கொள்வது?

      நினைத்த மாத்திரம் நம்மில் பொங்கும் பிரபஞ்ச ஓர்மை உணர்வு, எண்ணங்களில் சீர்மை, அகத்தாய்ந்த எண்ணங்களே சொல்லாய் செயலாய் வெளிப்படல், புலனின்ப உணர்வுகளில் அளவுமுறை, தவறாது அனைத்தினரிடமும் பொங்கும் அன்பு, நிறை மனம், உள்ளுணர்வு, விளைவை ஆராய்ந்த செயல்முறை, சினமின்மை, கவலையின்மை, இன்ன பிற பண்புகளால் அறியப்படுவார் குருவழி நின்ற ஒரு நற்பண்பாளர்.

      தகப்பனுக்கே உபதேசம் செய்து குருசுவாமியாகியவர் முருகன். ஆகவே குருவுக்கு வயது என்பது இல்லை. குருவானவா எந்த வயதினராகவும் இருக்கலாம். எந்தப் பாலினத்தவராகவும் இருக்கலாம். போலிக் குருவை அடையாளம் கண்டு கொண்டால் உண்மைக் குருவை யார் என்று தெரிந்து கொள்ளலாம்.

      "குருட்டினை நீக்கும் குருவினைக் கொள்ளார்
       குருட்டினை நீக்காக் குருவினைக் கொள்வர்
       குருடுங் குருடுங் குருட்டாட்டம் ஆடிக்
       குருடுங் குருடும் குழி விழுமாறே

       ஆமாது அறியாதோன் மூடன் அதிமூடன்
       காமாதி நீங்காக் கலதி கலதிகட்கு
       ஆமாறு அசத்துஅறி விப்போன் அறிவிலோன்
          கோமான் அலன் அசத்தாகும் குரவனே".

                                 -     திருமந்திரம் -