10:15 PM
SHREE VILVAM YOGA CENTRE
, Posted in
benefit of yoga
,
shree vilvam
,
vilvam
,
yoga
,
0 Comments
தன்னுள் இருக்கும் இறைவனை நாம் அனைவரும் அறிய வேண்டும். ஆனால் இன்றைய கணிப்பொறி உலகத்தில் அறிவது மிகவும் கடினம். இருந்தாலும் இதை அறிந்து கொண்டால் எல்லையில்லா பேரின்பத்தை நம்மால் அடைய முடியும்.
இந்த பேரின்பத்தை அடைய ஒரே வழி சித்தர்கள் காட்டிய யோக முறை தான். இந்த யோக முறையில் பல நிலைகள் இருக்கிறது. எல்லா நிலைகளையும் கற்றுக் கொள்ள வேண்டுமானால் படிப்படியாகத்தான் கற்றுக்கொள்ள வேண்டும்.
இந்த யோக முறையை கற்றுக் கொண்டால் நாம் அடையும் பலன்கள் ஏராளம். இன்றைய உலகத்தில் நோய்களின் எண்ணிக்கையோ கணக்கில் அடங்காதவை. இந்த நோய்களிலிருந்து நம் உடலையும் உயிரையும் காப்பாற்ற வேண்டும்.
ஒரு மனிதன் ஆரம்பத்தில் உடம்பில் எந்தவிதமான நோய்களும் இல்லாமல் இருந்தால் தான் ஆரோக்கியமாக இருப்பதாக எடுத்துக்கொள்ளக் கூடாது. காரணம் நம் உடம்பில் உள்ள கழிவுகள் முழுமையாக தினந்தோறும் வெளியே செல்வதில்லை. ஆகையால் சில வருடங்கள் கழித்து நம் உடம்பில் நோய்கள் ஏற்படக்காரணமாகின்றோம்.
நோய்கள் வந்தாலும் சரி, நோய்கள் உடம்பில் இல்லையென்றாலும் சரி நாம் அனைவரும் யோக முறையைக் கற்றுக்கொள்ள வேண்டும்.
அப்படியென்றால் நாம் ஏன் யோக முறையை கற்றுக்கொள்ள வேண்டும்? என்ற கேள்வி எழும் இதை விவரமாக கூறுகிறேன்! கேளுங்கள்.
ஒரு மனிதனுக்கு நோய்கள் இல்லையென்றால் அவனுக்கு 21 வயது ஆகும்போது யோகா கற்றுக்கொண்டால் அடுத்து வரும் வருடங்களில் நோய்கள் அவனை நெருங்காது.
மனதில் ஒருவிதமான அமைதி ஏற்படும். குடும்பத்தில் எந்த பிரச்சனை ஏற்பட்டாலும் மனதில் ஒரு நிலையான அமைதி ஏற்படும்.
நல்ல சுறுசுறுப்பு, தொழிலில் அதிக கவனம், சிறந்த அன்பு கொண்டவர்களாக நடந்து கொள்ளும் நிலை யோகா கற்பதினால் ஏற்படும்.
இப்படி பல விஷயங்கள் சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால் குறிப்பாக சில விஷயங்கள்.
* நோய்கள் நம்மை அணுகாது.
* நம் வாழ்நாள் கூடும்
* வயது கூடினாலும் இளமைத் தோற்றமாக தெரிவோம்.
* இயற்கைக்கும், நமக்கும் உள்ளத் தொடர்பைத் தெரிந்துகொள்வோம்.
* தன்னுள் இருக்கும் இறைவனை அறிய முடியும்.
நோய்கள் இல்லாதவர்கள் தான் யோகா செய்யமுடியும் என்பதில்லை. நோய்கள் உள்ளவர்களும் அதற்கான யோகமுறைகளை கற்றுக்கொண்டால் உடம்பில் உள்ள நோய்கள் முதலில் நீக்கப்படும். அதன்பிறகு மற்ற யோக நிலைகளை நாம் கற்றுக்கொண்டால் நாமும் எல்லாவற்றையும் அறிய முடியும்.
0 Response to "யோகாவின் அவசியமும் பயன்களும்"
Post a Comment