யோகா

ஏறத்தாழ 14 ஆண்டுகளாக நாங்கள் செய்து வரும் உன்னத பணியால்
பயன் பெற்றோர் சுமார் 2000 கும்பங்கள்
பயபெற்றுகொண்டிருப்போர் ஏராளம்
நோயில்லா மருந்தற்ற உன்னத வாழ்வை யோக முறையில் பெற வாருங்கள் பயன்பெறுங்கள்

free web counter
அறிவை அறிவால் அறிந்து கற்பதே சிறந்தது

குருவின் அவசியம்

"குருவே சிவமெனக் கூறினன் நந்தி குருவே
 சிவம் என்பது குறித்து ஓரார் குருவே
 சிவனுமாய்க் கோனுமாய் நிற்கும் குருவே
 உரை உணர்வு அற்றதோர் கோவே"

      ஒரு வருடம் தவமிருப்பார் திருமூலர். ஒரு பாடலைப் பாடுவார். மீண்டும் தவத்தில் முழ்குவார். ஒரு வருடம் முடிந்ததும் தவத்தால் தாம் பெற்ற அனுபவத்தை ஒரு பாடலாகப் பாடுவார். அப்படி மூவாயிரம் ஆண்டுகள் தவமியற்றி மூவாயிரம் திருமந்திரப் பாடல்களை அருளிச்செய்தார்கள் திருமூலநாயனார்.

      கடவுள் மனித உருவத்தில் தம்மைத் தெரிவித்துக் கொள்ளும் பெரிய அவதாரங்களே குருமார்கள். அவர்களைக் கடவுளாகவே நினைத்துப் போற்ற வேண்டும். குருமார்கள் எல்லாம் கடவுளின் பிரதிநிதிகள் என்றே கொள்ள வேண்டும். சிவபெருமானின் ஆணையை ஏற்று இவ்வுலகத்திற்கு நலம் செய்வதற்காகவே பிறப்பெடுக்கும் புண்ணிய மூர்த்திகளே குருமார்கள். பழகிய யானையைக் கொண்டு புதிய யானையைப் பிடிப்பது போல, நம்மைப் போலவே மானிட வடிவம் தாங்கிக் கடவுளே நம்மை உய்விக்க்க் குருவடிவில் வருவதாக்க் கொள்ள வேண்டும்.

      திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி சுவாமிகள், மாணிக்கவாசகப் பெருமான் போன்றவர்களில்லை என்றால் உலகில் அன்புநெறி காணப்படுமா?

      கட்டையில் நெருப்புள்ளது. அந்த நெருப்பினை (ஒளியை) வெளியே கொண்டுவர வேறு ஒரு கட்டை வேண்டும். வேறு ஒரு கட்டையுடன் உரசும் பொழுது, கட்டையினுள்ளிருக்கும் நெருப்பு (ஒளி) வெளியே வருகிறது. அதைப்போல நம் உள்ளேயிருக்கும் ஆன்ம ஒளியை, வேறு மனித வடிவம் தாங்கி வரும் குருவால்தான் வெளியே கொண்டுவர முடியும். பசுவிடம் பால் பெறுவதற்கு கன்றுக்குட்டி அவசியமாதல் போல சிவ பெருமானது திருவருளைப் பெறுவதற்குக் குருவருள் அவசியமாகும்.

      சூரிய காந்தக் கல்லின் மீது சூரிய ஒளி பட்டவுடன் நெருப்பு எழுவது போல குருவின் அருட்பார்வை நம்மீது பட்டவுடன் மெய்ஞானம் தோன்றும். குருவினால் இப்பிறவியில் பெறும் ஞானம் (அறிவு) எடுக்கின்ற பிறவிகள் தோறும் தொடர்ந்து வருவதாகும்.

      "குருட்டினை நீக்கும் குருவினைக் கொள்ளார்
      குருட்டினை நீக்காக் குருவினைக் கொள்வர்
      குருடுங் குருடுங் குருட்டாட்டம் ஆடிக்
      குருடுங் குருடும் குழி விழுமாறே"

(குருட்டினை நீக்குதல்-அறியாமை நீக்குதல், குருடு-அறிவிலி, குழிவிழுதல்-துன்பத்திற்குள்ளாதல்)

நம்மில் குரு அருள் நிரம்புவதை எப்படி கண்டறிந்து கொள்வது?

      நினைத்த மாத்திரம் நம்மில் பொங்கும் பிரபஞ்ச ஓர்மை உணர்வு, எண்ணங்களில் சீர்மை, அகத்தாய்ந்த எண்ணங்களே சொல்லாய் செயலாய் வெளிப்படல், புலனின்ப உணர்வுகளில் அளவுமுறை, தவறாது அனைத்தினரிடமும் பொங்கும் அன்பு, நிறை மனம், உள்ளுணர்வு, விளைவை ஆராய்ந்த செயல்முறை, சினமின்மை, கவலையின்மை, இன்ன பிற பண்புகளால் அறியப்படுவார் குருவழி நின்ற ஒரு நற்பண்பாளர்.

      தகப்பனுக்கே உபதேசம் செய்து குருசுவாமியாகியவர் முருகன். ஆகவே குருவுக்கு வயது என்பது இல்லை. குருவானவா எந்த வயதினராகவும் இருக்கலாம். எந்தப் பாலினத்தவராகவும் இருக்கலாம். போலிக் குருவை அடையாளம் கண்டு கொண்டால் உண்மைக் குருவை யார் என்று தெரிந்து கொள்ளலாம்.

      "குருட்டினை நீக்கும் குருவினைக் கொள்ளார்
       குருட்டினை நீக்காக் குருவினைக் கொள்வர்
       குருடுங் குருடுங் குருட்டாட்டம் ஆடிக்
       குருடுங் குருடும் குழி விழுமாறே

       ஆமாது அறியாதோன் மூடன் அதிமூடன்
       காமாதி நீங்காக் கலதி கலதிகட்கு
       ஆமாறு அசத்துஅறி விப்போன் அறிவிலோன்
          கோமான் அலன் அசத்தாகும் குரவனே".

                                 -     திருமந்திரம் -

0 Response to "குருவின் அவசியம்"

Post a Comment